கிராண்ட் செஸ் தொடர்: பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

 
செஸ் பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் தொடரில், இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

பிரக்ஞானந்தா

இந்தத் தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் முன்னணி வீரரான வின்சென்ட் கீமரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரக்ஞானந்தா, 19-9 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டியை உறுதி செய்தார்.

பிரக்ஞானந்தா

கிளாசிக்கல் மற்றும் ரேபிட் ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலை பெற்ற பிரக்ஞானந்தா, பிளிட்ஸ் ஆட்டங்களிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். கீமர் சில போட்டிகளில் ஆறுதல் வெற்றிகளைப் பெற்றாலும், ஒட்டுமொத்தப் புள்ளிகள் அடிப்படையில் பிரக்ஞானந்தா எளிதில் வெற்றி பெற்றார்.