கிராண்ட் செஸ் தொடர்.. 'ரேபிட்' பிரிவில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து சாதனை!

 
செஸ் பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் தொடரின் ‘ரேபிட்’ சுற்று முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

9-வது மற்றும் கடைசிச் சுற்று ஆட்டத்தில் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரஸ்டிடம் 28-வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தபோதிலும், ஒட்டுமொத்த சுற்றுகளின் முடிவில் 12 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா ரேபிட் பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

செஸ் பிரக்ஞானந்தா

உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ் (11 புள்ளிகள்) 2-வது இடத்தையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ (10 புள்ளிகள்) 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா (இந்தியா) - 12 புள்ளிகள், ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) - 11 புள்ளிகள், வெஸ்லி சோ (அமெரிக்கா) - 10 புள்ளிகள், லெய்னர் டோமினிகஸ், அனிஷ் கிரி, லெவோன் அரோனியன், வின்சென்ட் கீமர் – தலா 9 புள்ளிகள், பாபியானோ கருனா, ஜோர்டான் வான் பாரஸ்ட் -  தலா 8 புள்ளிகள். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 18 சுற்றுகள் கொண்ட 'பிளிட்ஸ் பிரிவு போட்டிகள் தொடங்கவுள்ளன.