கிராண்ட் செஸ் டூர்... ஜெர்மனி வீரரை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி!

 
பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியின் அரையிறுதியில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கீமரை  பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். அரையிறுதியின் 2-வது கிளாசிக்கல் ஆட்டத்தில் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம், பிரக்ஞானந்தா தொடக்கத்தில் 6 புள்ளிகள் முன்னிலை பெற்று ஆதிக்கத்தைத் தொடங்கினார்.

பிரக்ஞானந்தா

தொடர்ந்து நடைபெற்ற விரைவு மற்றும் மின்னல் (Blitz) சுற்றுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா, இறுதியில் 19-9 என்ற பெரிய புள்ளிகள் கணக்கில் கீமரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இந்தச் சிறப்பான வெற்றியின் மூலம் சர்வதேச அளவிலான கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய நட்சத்திர வீரன் பிரக்ஞானந்தா கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளார்.