ரூ70,00,00,000/- செலவில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம்!

 
ரூ70,00,00,000/- செலவில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம்!


ரூ70,00,00,000/- செலவில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம்!

தி.மு.க.சார்பில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் மிக முக்கியமானது சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூலகத்தை போல் பிரம்மாண்டமாக மதுரையில் கலைஞர் நூலகம். இதற்கான நிலம் கையகப்படுத்தும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி, உலக தமிழ் சங்க வளாகம், தமுக்கம், பழங்காநத்தம், சிம்மக்கல், ஒத்தக்கடை பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஏழு தளங்களுடன் நவீன வசதிகள் கொண்ட நூலகம் என்பதால் மதுரையின் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்ல வசதியான இடத்தில் இந்த நூலகம் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இது வரை நடத்தப்பட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மதுரை – நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கலைஞர் நூலகம் அமைய சரியான இடமாக அமையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ரூ70,00,00,000/- செலவில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம்!

கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் முதல் வாரம் நடைபெறலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். அதிகாரப்பூர்வ தேதி ஓரிரு நாளில் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் மாணவ-மாணவிகள் போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள தேவையான புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்க தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என்று லட்சக்கணக்கான புத்தகங்களுடன், நவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களில் மதுரையின் புது அடையாளமாக கலைஞர் நூலகம் அமையும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

From around the web