பெரும் பரபரப்பு.. நின்றிருந்த ரயில் மீது அதிவேகமாக மோதிய மற்றொரு ரயில்.. தடம் புரண்ட என்ஜின்!

 
உத்தரபிரதேச சரக்கு ரயில் விபத்து

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் மற்றொரு சரக்கு ரயில் மோதியதால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதிகாலை 4.30 மணியளவில் ஷுஜாத்பூர் மற்றும் ரசூலாபாத் இடையே ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் இருந்து மோதியது. இந்த சம்பவத்தில் வேகமாக வந்த  ரயிலின் என்ஜின் தடம் புரண்டது.


அதிர்ஷ்டவசமாக, இவ்வளவு பெரிய விபத்தில், இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த போதிலும், ஓட்டுநர் ரயிலை வேகமாக ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!