பெரும் பரபரப்பு.. பல நாளாக போலீசுக்கி டிமிக்கி கொடுத்த பிரபல கொள்ளையன் அதிரடி கைது!

 
பிரபாகரன்

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர் நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் என்பவரது டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கடையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஆசாமி அங்கு வந்து கல் மேசையை தட்டி புகையிலை கேட்டார். இங்கு புகையிலை விற்பனை செய்வதில்லை என்றார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த சோடா பாட்டில், மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினார். மேலும், பிரபாகரனின் பைக்கையும் அடித்து நொறுக்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசில் பிரபாகரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், ரகளையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்த மதன்குமார் (27) என்பவரை கைது செய்ய முயன்றனர்.  போலீசை கண்டதும் தப்பிக்க முயன்ற அவரை போலீசார் துரத்தினர். இதில் அவர் அங்கிருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றார். இதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஓட முடியாமல் தவித்த மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைதான மதன்குமார் மீது கோவை, போத்தனூர், சாய்பாபகாலனி, ரத்தினபுரி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web