பெரும் பரபரப்பு.. பிரபல எஸ்.எஸ்.பிரியாணி கடைக்கு அதிகாரிகள் ’சீல்’ வைத்து நடவடிக்கை!
சென்னையில் பல கிளைகளை கொண்டுள்ள எஸ்.எஸ்.பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் வாந்தி எடுத்ததால், கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சமீபகாலமாக உணவகங்கள், இறைச்சிக் கடைகளில் தரமற்ற இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அழிப்பதுடன், பல கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
SS பிரியாணி உணவகம் சென்னையில் உள்ள பிரபலமான அசைவ உணவகங்களில் ஒன்றாகும். சென்னையில் மட்டும் 25க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இங்கு பிரியாணிக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், எஸ்.எஸ்.பிரியாணியின் கொடுங்கையூர் கிளையில் (எம்.ஆர்.நகர் சிப்காட் பகுதியில் உள்ளது) பிரியாணி வாங்கி சாப்பிட்ட பலர் நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இந்த விவகாரம் பொதுமக்களின் கவனத்துக்கு வந்ததும், பிரச்னை ஏற்பட்டது.
அதன்பின், அங்கு வந்த போலீசார், இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தக் கடையில் விற்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 34 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கொடுங்கையூர் எஸ்எஸ் ஐதராபாத் பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா