பெரும் பரபரப்பு... ஆசிரியர்கள் போராட்டம்... பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடக்கம்!

 
ஆசிரியர்கள் போராட்டம்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி ஜோசப் பள்ளி ஆகிய மையங்களில் திருத்தப்படுகின்றன. 

விடைத்தாள் திருத்தும் பணியில் சுமாா் 2000 ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். ஏப்ரல் 4ம் தேதி தொடங்கிய இந்த பணி 20 நாள்கள் நடைபெறும் என கூறப்பட்டது.  

இந்நிலையில், மாநகரப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டுப்படி  நாளொன்றுக்கு ரூ200  கொடுக்கப்படும். நகரப்பகுதிகளில் ஈட்டுப்படி ரூ.200 கொடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடங்கியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web