பெரும் பரபரப்பு.. ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த வாலிபர்.. ஷாக் ஆன பயணிகள்!

 
தேவனஹள்ளி ரயில் நிலையம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் புதிய பிரமாண்ட ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த ரயில் நிலையம் தேவனஹள்ளியில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரின் நெரிசலைக் குறைக்க தேவனஹள்ளியில் புதிய ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது.

இந்நிலையில், தேவனஹள்ளி ரயில் நிலையத்தில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டனர். உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை யாராவது அடித்துக் கொன்று தூக்கில் தொங்கினார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தேவனஹள்ளி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web