பெரும் சோகம்... திருமண விழாவில் பட்டாசு வெடி சத்தத்தில் 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பாதிப்பு!

இரைச்சல் , அதீத ஒலி, அதிக டெசிபல் சத்தம் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விழா கொண்டாடுபவர்கள் இதனை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதனால்தான் திருமண நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்வில் ஒலிப்பெருக்கியின் அருகில் அமரக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.
கேரளாவில் பண்ணூரை அடுத்த திருபரங்கோட்டூர் கல்லிகண்டி மொயிலோத் பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் கடந்தவாரம் திருமணவிழா ஒன்று அரங்கேறியது. அவ்விழாவில் மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் போது பட்டாசுகளை வெடித்து கொண்டாடியுள்ளனர். அவர்களது கொண்டாட்டத்தால் அப்பகுதியில் வசித்த முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதிப்பட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிறந்து 18 நாட்களாகிய குழந்தை ஒன்று இருந்தது. இந்த இரைச்சலும், வெடிச்சத்தமும் அந்தப் பிஞ்சுக் குழந்தையை தாக்கி அக்குழந்தை உடல் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையின் பெற்றோர், குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மணமக்கள் அழைப்பின்போதெல்லாம் அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதும் சத்தம் போடுவதும் வாடிக்கையாக இருப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மணமக்கள், கொண்டாட்டத்தை வெடியில்லாமல் கொண்டாடினால் எல்லோர் மனமும் நிறையும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!