பெரும் சோகம்... தென்காசியில் பட்டாசு ஆலையில் தீ விபத்து... ஏராளமானோர் சிக்கியிருக்கும் கொடுமை... மீட்பு பணியில் தொய்வு!

 
தென்காசி

தென்காசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறி வருகின்றன. ஆலைக்குள் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் மைபாறை அருகே ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலைக்கு அருகே வயல்வெளியில் அறுவடை செய்த மக்காச்சோளத்தில் திடீரென தீ பிடித்து பரவியதையடுத்து, பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் பகுதியில் அமைந்துள்ளது ஏவிஎம் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை. ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் வழக்கம் போல் இன்று பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தன. இந்நிலையில் மதிய வேளையில் ஒரு அறைக்கு அருகே வயல்வெளியில் அறுவடை செய்து வைக்கப்பட்டிருந்த மக்காசோளத்தில் தீ பிடித்து பரவியதையடுத்து வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் பெரும் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து  சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலைக்குள் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால், தீயணைப்பு வீரர்கள் அருகே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்பு பணிகள் தொய்வடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web