பெரும் சோகம்.. குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி!

 
குடியாத்தம் ஏரி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. இவரது மகள் லலிதா. இன்று சரோஜா தனது மகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 4 பேருடன் முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். சாமி தரிசனம் முடித்த பெண்கள் அங்குள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரின் ஆழத்தில் ஒருவர் சிக்கிக் கொண்டார்.

பதற்றத்தில் அவரைக் காப்பாற்ற முயன்ற 4 பேரும் நீரில் மூழ்கினர். ஏரிக்கரையில் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் ஏரியில் சோதனை செய்ததில் 4 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டன.

அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் விவரங்கள் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web