பெரும் சோகம்... போலீஸ் ஏட்டு விபத்தில் படுகாயம் அடைந்து பலி!
தென்காசி மாவட்டத்தில் ஆபாத் பள்ளி வாசல் தெருவில் வசித்து வருபவர் 40 வயது செய்யது அலி. கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த செய்யது அலி மாவட்ட போலீஸ் தனிப்படை பிரிவில் வேலை செய்தார்.

இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி இரவில் பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றார். அந்த சமயத்தில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் செய்யது அலி படுகாயம் அடைந்தார். அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான தென்காசிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு சக காவல்துறை நண்பர்கள் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர். 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செய்யது அலி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
