பெரும் சோகம்... கதறித் துடித்த உறவினர்கள்... பசுமாட்டை காப்பாற்ற சென்று மின்சாரம் தாக்கி பெண் பலி!

 
விக்னம்மாள்

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பாப்பணம்பட்டி கிராமத்தின்  வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விக்னம்மாள்.  இன்று காலை வீட்டில் கட்டி வைத்திருந்த பசு மாடு அலறும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது  வீட்டிற்கு வெளியே செல்லக்கூடிய மின் கம்பத்தில் இருந்து 4மயில்கள் பறந்து சென்றன.  எதிர்பாராதவிதமாக  மின்வயர் அறுந்து அருகில் கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டின் மீது விழுந்துவிட்டது.

ஆம்புலன்ஸ்

இதனை கண்ட விக்னம்மாள் பசுமாட்டை காப்பாற்ற ஓடினார். அப்போது  அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால், பசுமாடு மற்றும் விக்னம்மாள் இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து  காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் மின்வாரியத்திடம் தகவல் தெரிவித்து மின் இணைப்பை  உடனடியாக துண்டித்தனர். பின்னர் உயிரிழந்த விக்னம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சார ஒயர் அறுந்து பெண் மற்றும் பசுமாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!