பெரும் சோகம்.. தன்னுடன் வாழ மறுத்த மனைவி.. மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை..!

 
தந்தையும் மகளும் தற்கொலை
4 வயது மகளுடன் தந்தை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கட்டக்குடியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவரது மனைவி  இவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார்.  சில தினங்களுக்கு முன்பு  தாய் வீட்டுக்கு சென்றிருந்த மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பால்ராஜ் அழைத்திருக்கிறார். அதற்கு அவரது மனைவி வர மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே மீண்டும் சண்டை முற்றியுள்ளது.

Viralimalai, Pudukkottai : விராலிமலை: செல்லம்பட்டி கிராமத்தில் மாடு வயலில்  மேய்ந்த விவகாரத்தில், இரு குடும்பத்தினரிடையே தகராறு | Public App

இதனையடுத்து தன்னை கணவன் கொலை செய்ய முயற்சிப்பதாக பால்ராஜ்  மனைவி இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பால்ராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்த பால்ராஜ் விரக்தியில் காணப்பட்டார்.

பால்ராஜ்

துக்கத்தில் இருந்த  பால்ராஜ் அவரது நான்கு வயது மகள் நிரஞ்சனாவுடன் நேற்று மாலை குளிக்க செல்வதாக கூறிவிட்டு ஊரில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை இருவரது உடல்களும்  குளத்தில் மிதப்பதை கண்ட ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்த நிலையில் இருந்த சடலைத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

From around the web