பெரும் அதிர்ச்சி.. சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாப பலி!

சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு நகரமான ஜீஷானில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திய தூதரகம் சவுதி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர், அவர்களில் 9 பேர் இந்தியர்கள்.
சாலை விபத்தில் காயமடைந்த இந்தியர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். விபத்து குறித்து அறிந்து அவர் வருத்தமடைந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!