அதிர்ச்சி... ரோட்டிலிருந்த பாம்பை கவ்வியபடி வீட்டிற்குள் நுழைந்த பூனை... பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!
விதி வலியதுன்னு சொல்லிக் கேட்டிருக்கிறோம்.. எங்கேயோ ரோட்டில் இருந்த பாம்பை, வளர்ப்பு பூனை ஒன்று தேடிப் பிடித்துக் கவ்விக் கொண்டே வீட்டிற்குள் கொண்டு வந்து போட்ட நிலையில், கடிபட்ட பாம்பு, அறையில் தூங்கிக் கொண்டிருந்தவரைக் கொத்தியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். கோவை பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் சந்தோஷ். பூனையை பொழுதுபோக்காக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த வளாகத்தில் சுற்றித் திரிந்த பாம்பை பூனை துரத்திச் சென்று கடித்தது. அதன்பின், வீட்டில் உள்ள ஒரு அறையில் பாம்பை வைத்து விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில் அந்த அறையில் சாந்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதையடுத்து, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியை அங்கிருந்த பாம்பு கடித்துள்ளது. திடுக்கிட்டு எழுந்த சாந்தி, தன்னை பாம்பு கடித்ததை அறிந்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, மகன் சந்தோஷ், உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். வளர்ப்பு பூனை பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா