பெரும் அதிர்ச்சி.. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கோர விபத்து.. 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

 
 நைனார் மண்டபம்

புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரப்பாலத்தில் இருந்து நைனார் மண்டபம் வழியாக வடிகால் பணி நடந்து வருகிறது. இங்குள்ள வசந்தநகர் பகுதியில் இன்று காலை ஏராளமான கூலித்தொழிலாளர்கள் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள துணை மின் நிலைய சுற்றுச்சுவர் திடீரென இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்கள் பாக்யராஜ், பாலமுருகன் மற்றும் மற்றொரு பாலமுருகன் என அடையாளம் காணப்பட்டனர். இங்கு வேலை பார்ப்பதற்காக திருவண்ணாமலை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற தொழிலாளர்கள் யார் என்பது குறித்து புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.துணை மின்நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web