பெரும் ஷாக்.. மனைவியை சுட்டுக் கொன்று சிஆர்பிஎஃப் வீரரும் தற்கொலை.. கதறும் இரு பிஞ்சு குழந்தைகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் மிஸ்ரோரைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் ரசிகாந்த் வர்மா (35), தனது மனைவி ரேணு, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று குடும்ப தகராறில் தனது மனைவி ரேணுவை துப்பாக்கியால் சுட்டார். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தனது மனைவி ரேணுகாவை சுட்டுக் கொன்றதாக அவர் கூறினார்.
பின்னர், ரவிகாந்த் வர்மா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும், மிஸ்ரோர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ரவிகாந்த் வர்மாவின் வீட்டின் ஒரு அறையில் தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அவர்களது 6 வயது மகனும் 2 வயது மகளும் மற்றொரு அறையில் அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இறந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!