பெரும் அதிர்ச்சி.. குடிபோதையில் 2 மாத ஆண் குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது!

 
குழந்தை  பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலைய சாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த மணிகண்டன் குழந்தையை தாக்கினார்.

இதில் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் சரோஜினி புகார் அளித்தார். போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 குழந்தை

இந்நிலையில் மருத்துவர் சிகிச்சை அளித்து வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து தாய் சரோஜினி கதறி அழுதார். இதையடுத்து, குழந்தையைத் தாக்கியதாக மணிகண்டன் மீது போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா