பெரும் ஷாக்.. அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய ஒருவர் கைது.. 2 பெண்கள் மீட்பு!

 
தீபக் பவுடல்

திருமங்கலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவு-1 காவல் துறைத் தலைவர் தலைமையிலான சிறப்புக் குழுவிற்கு பிப்ரவரி 3 ஆம் தேதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருமங்கலம், என்.வி.என். நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை சிறப்புக் குழு கண்காணித்து, அங்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை உறுதி செய்தது.

பாலியல் தொழில்

அதன்படி, பெண் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட சிறப்புக் குழு போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தி, தேனாம்பேட்டை சேனாதாப் சாலையைச் சேர்ந்த தீபக் பவுடல் (29) என்பவரை கைது செய்தனர். மேலும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மேற்படி இடத்தில் தங்கியிருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.கைது செய்யப்பட்ட  தீபக் பவுடல் விசாரணைக்குப் பிறகு பிப்ரவரி 4 ஆம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி காவலில் வைக்கப்பட்டார். "மீட்கப்பட்ட இரண்டு பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web