பெரும் அதிர்ச்சி.. காணமல் போன சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!

 
தானே சிறுவன்

மகாராஷ்டிராவில் தானே மாவட்டம் வாய்க்கால் அருகே 12 வயது சிறுவன் சடலமாக கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்ச் 25 முதல் காணாமல் போன சிறுவன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்த பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  தெரிவித்தனர்.   12 வயது சிறுவன் , மார்ச் 12 அன்று தாகூர்பாடா பகுதியில் இருந்து காணாமல் போனார். அவரது பெற்றோர், தீவிரமாக தேடி, அவரது மரணம் பற்றி அறிந்ததும் மீளா துயரத்தில் ஆளாகியுள்ளனர் என்று காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

போலீசார், பலரிடம் விசாரணை நடத்தி, தீவிரம் காட்டி வருகின்றனர். குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். ஷில் டைகர் போலீசார் விசாரணையை தொடங்கி, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோரை விசாரித்த பிறகு, சந்தேகத்திற்கு இடமான வகையில் சந்தேகப்படும்படியாக ஒருவரை கைது செய்துள்ளோம்.

கொலை

அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. ஷில் டைகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web