அதிர்ச்சி.. ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கவிழ்ந்து பெரும் விபத்து!

 
பீகார் ரயில் விபத்து

பீகாரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டது. வீரர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராஜஸ்தானில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு சிறப்பு ரயிலில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். பீகாரில் கோரக்பூர் - நர்கதியாகஞ்ச் இடையே பகாஹா ரயில் நிலையத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு இடத்தில் ரயில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

எனவே முன்னாள் எஞ்சினுடன் இணைக்கப்பட்ட பெட்டிகள் தனித்தனியாக சென்றன. மற்ற தொடர் பெட்டிகள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, முன்னதாக ஓடும் ரயிலை நிறுத்தினர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என மேற்கு சப்பரன் கலெக்டர் தினேஷ்குமார் ராய் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளை ரயில்வே அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி துவங்கியுள்ளது. "சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த வழித்தடத்தில் விரைவில் ரயில்கள் இயக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web