பெரும் அதிர்ச்சி.. கொடைக்கானல் நிலத்தில் திடீரென ஏற்பட்ட விரிசல்.. பீதியில் மக்கள்!

 
கொடைக்கானல்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கொடைக்கானலுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள் வானளாவிய மரங்கள், பச்சைப் போர்வைகள் நிறைந்த மலைகளை சுற்றி பார்த்து மகிழ்வர். இந்நிலையில், கொடைக்கானல் அருகே தொலுக்கம்பட்டியில் 300 அடி நீளம் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானல்

இப்பகுதிக்கு வழக்கமாக வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு பைப் லைன் மூலம் வருவதில்லை. இதனால், அப்பகுதி கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது, ​​நிலம் பிளந்து கிடப்பதை கண்டனர்.

மேல்மலை கிளாவரை தொலுக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதியில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேலும், வனத்துறையினரின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web