பெரும் அதிர்ச்சி.. அரிவாளுடன் ஓடி வந்த இளைஞர்.. நூலிழையில் தப்பித்த குடும்பம்!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மருதடியூர் நடுத்தெருவை சேர்ந்த கணேஷ் என்ற 35 வயது வாலிபர் சாக்கு மூட்டை தொழிலாளி. நேற்று மதியம் கணேஷ் தனது இரு குழந்தைகளுடன் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்ற 27 வயது வாலிபர் கையில் அரிவாளுடன் கணேஷ் மற்றும் அவரது குழந்தைகளை நோக்கி ஓடினார். உஷாரான கணேஷ் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

அப்போது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த கணேஷின் தாயாரை, அரிவாளுடன் ஆக்ரோஷமாக வந்த கலைச்செல்வன் தாக்க முயன்றார். மேலும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கணேஷின் பைக் இருக்கையை அரிவாளால் குத்தி, தகாத வார்த்தைகளால் திட்டினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தபோது கலைச்செல்வன் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருதடியூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கணேஷுக்கும், கலைச்செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, முன்விரோதம் காரணமாக கலைச்செல்வனிடம் அரிவாளுடன் வந்து கணேஷ் வெட்ட முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பட்டப்பகலில் வாலிபர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
