பெரும் அதிர்ச்சி.. நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் சுட்டுக்கொலை.. பழமைதனம் கொண்ட தீர்ப்பால் அதிருப்தி!

 
முகமது மொஹிரா - அலி ரசானி

ஈரானின் உச்ச நீதிமன்றம் ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் அமைந்துள்ளது. முகமது மொஹிரா மற்றும் அலி ரசானி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தனர். இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு ஓய்வு அறையில் இரண்டு நீதிபதிகளும் இருந்தனர். அந்த நேரத்தில், துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அங்கு வந்து நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.  நீதிபதிகள் மொஹிரா மற்றும் அலி ரசானி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும், நீதிபதிகளின் மெய்க்காப்பாளரும் தாக்குதலில் பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சூட்டில் இறந்த இரண்டு நீதிபதிகளும் தீவிர அடிப்படைவாத கொள்கைகள் பின்பற்றுபவர்கள் என்றும், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிப்பதில் பெயர் பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்ற வளாகத்தில் இரண்டு நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஈரானிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web