பெரும் பதற்றம்.. துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்... மருத்துவமனைக்கே வந்த கடிதம்!

 
துரை தயாநிதி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் அழகிரியும் மத்திய அமைச்சராக இருந்தவர். ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கினார். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய இவரது மகன் துரை தயாநிதி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் 4 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த இவர், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள ஏ-பிளாக்கில் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளருக்கு நேற்று (ஆகஸ்ட் 10) மிரட்டல் கடிதம் வந்தது.

அதில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த மின்னஞ்சல் முகவரியை ஆய்வு செய்து வருகின்றனர். மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஏ பிளாக்கில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா