பெரும் சோகம்... பழமையான மரம் விழுந்து பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு.. பலரும் கவலைக்கிடம் !

 
பாபுஜி

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலபூர் தேசில் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபுஜி மகராஜ் மந்திர் சன்ஸ்தான் உள்ளது. இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வழிபாடுக்கு வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

பாபுஜி

இந்நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது அங்குநின்ற பழம்பெரும் மரம் ஒன்று வேரோடு விழுந்தது. இதில் ஒரு ஷெட்டில் இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகர கொட்டகைக்குள் நெருக்கியடித்த படி மழைக்கு ஒதுங்கிநின்றபோது அந்த ராட்சத மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

இதில் தகர கொட்டகை இடிந்து விழுந்தது. தகர கொட்டகைக்குள்ளும், மரத்தின் அடியிலும் சிக்கி கொண்டனர். இதனை கண்டு கோவிலுக்கு உள்ளே இருந்த பக்தர்கள் அலறினர். அப்பகுதி மக்கள் விரைந்துசென்று மரத்தின் அடியில் சிக்கி கொண்ட பக்தர்களை மீட்க முயன்றனர். எனினும் அவர்களால் அனைவரையும் மீட்கமுடியவில்லை.

பாபுஜி

இதுபற்றி தகவல் தெரிந்து தீயணைப்பு நிலையத்தினருக்கும், போலீசாருக்கும் ஜே.சி.பி. எந்திரங்களுடன் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். விடிய, விடிய இந்த மீட்பு பணி நடந்தது. இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.     
  

From around the web