பெரும் சோகம்.. ஆட்டோவில் சென்ற தாயும் மகளும் துடிதுடித்து பலி !!

 
ஷமா ஆஷிப் சேக்

மகாராஷ்டிர மாநிலம் மும்பை பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த ஷமா ஆஷிப் சேக் ( 28), தனது மகள் அயத் ஆஷிப் சேக் (9) உடன் ஜோகேஸ்வரி மேற்கு விரைவு சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பரபரப்பான அந்த சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன.

அப்போது சால்யக் மருத்துவமனை அருகே சென்றபோது அங்கு கட்டப்பட்டுவரும் 14 மாடி கட்டிடத்தில் இருந்து கனமான இரும்பு பைப் ஒன்று இந்த ஆட்டோ மீது விழுந்தது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ கீழே அமுங்கி சேதமடைந்தது. இதில் பயணம் செய்த தாய் மற்றும் மகளின் தலையில் பலமாக தாக்கியது. 

ஆட்டோவின் மீது விழுந்த இரும்பு கம்பியால் பரிதாபம்!!. தாயும் மகளும் பலியான சோகம்..!

படுகாயத்துடன் போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷமா ஆஷிப் சேக் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய சிறுமி அயத் ஆஷிப் சேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஷமா ஆஷிப் சேக்

சம்பவத்துக்கு காரணமான, கட்டுமான நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த இரும்பு கம்பி தாக்கி தாய், மகள் பலியான சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web