நாளை 10ம் வகுப்பு எழுதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 
ஸ்டாலின்

 நாளை மார்ச் 26ம் தேதி தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார் . நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 மையங்கள் அமைக்கப்பட்டு  மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். நாளை தமிழ் உட்பட  மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.  


 

தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 4591 பறக்கும் படைகள் முறைகேடுகளை தடுக்க  அமைக்கப்பட்டுள்ளன. ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள் மாற்றம் உட்பட  தகாத  செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு  3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். பள்ளிகளுக்கும் இதில் உடன்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால்  பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்  . 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 12 முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி
 


இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு  “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் செல்வதை  உறுதி செய்யுங்கள்,” எனத்  தெரிவித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web