கிரைண்டர் ஆப் மூலம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி... பெரும் பரபரப்பு!
Updated: Aug 8, 2026, 18:45 IST
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேலம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை மர்ம நபர்கள் சிலர் அழைத்து வந்துள்ளனர். குறிப்பிட்ட செயலி மூலமாக அவரை வரவழைத்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பொன்னாக்குடியைச் சேர்ந்த பூபதிராஜா மற்றும் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அருண், விஷ்ணுசுப்பு ஆகிய மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு பைக்கு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
