Grindr ஆப் மூலம் வரவழைத்து கத்திக்குத்து! ரூ.4,000 பறிப்பு - 2 பேர் கைது

 
விழுப்புரம்

 

விழுப்புரத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரை, Grindr ஆப் மூலம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே மர்ம நபர்கள் வரவழைத்ததாக கூறப்படுகிறது.பின்னர் அவரை ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்ற மர்ம நபர்கள், கத்தியால் தாக்கி காயப்படுத்தியதுடன், அவரிடம் இருந்த ரூ.4,000 ரொக்கத்தையும் பறித்துச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்

காயமடைந்த பச்சமுத்துவை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

கைது செய்யப்பட்ட இருவரிடமும் சம்பவத்தின் பின்னணி மற்றும் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.