வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்... முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய வசதி!

 
ரேஷன்

முதலமைச்சரின் 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் விநியோகம் செய்யும் உன்னதமான பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டச் செயல்பாடாக, நடப்பு ஜூலை மாதத்தின் 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில், ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் தங்களுக்குரிய பகுதிகளில் உள்ள தகுதியான பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.

ரேஷன்

விற்பனையாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி வீடு வீடாகப் பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு இல்ல விநியோகப் பணிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இதன் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் மீண்டும் நாளை அல்லது நாளை மறுநாள்  முதல் வழக்கம் போலத் திறக்கப்பட்டு, இதர கார்டுதாரர்களுக்குப் பொருட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாயுமானவர் ரேஷன்

ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத விளிம்புநிலை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த 'தாயுமானவர் திட்டம்' பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.