ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்து வரலாற்று சாதனை!

 
ஜிஎஸ்டி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வரி வசூல் சீராய்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி

மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் சுமார் 15 சதவீதம் அதிகரித்து, வரலாற்றுச் சாதனையாக ரூ. 1,99,853 கோடியை (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

ஜிஎஸ்டி மோடி

கடந்த ஆண்டு (2025) இதே ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ரூ. 1,74,116 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 14.8 சதவீத மகத்தான வளர்ச்சியாகும். அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நாட்டின் ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருவது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையைக் காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.