க்ரீம் பன் உட்பட திண்பண்டங்களுக்கு 5% வரி... ஜிஎஸ்டி கூட்டத்தில் பரிந்!துரை

 
க்ரீம் பன்

 இந்தியா முழுவதும் க்ரீம் பன் உட்பட நொறுக்குத்தீனிகள், திண்பண்டங்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறித்த  அமைச்சர்கள்  குழுவின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 55 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நவம்பரில் நடைபெற இருக்கும் நிலையில் இதில் சமர்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு அடித்தளமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்,  கிரீம் பன் உட்பட நொறுக்குத் தீனிகள் மற்றும் திண்பண்டங்கள் உட்பட   அனைத்து உணவு பொருட்களையும்  5% வரை விகிதத்திற்கு கொண்டுவர வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

க்ரீம் பன்

இந்த உணவுப் பொருட்களை  5 சதவிகித ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதன் மூலம் உருவாக இருக்கும் தாக்கங்கள்,  வருவாய் பகிர்வு பாதிக்கப்படுமா  குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.   ஏற்கனவே கிரீம் பன் உட்பட  உணவு பொருட்கள் மீதான வரிவிகிதத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளும்  பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதேபோல் பென்சில், பேனா உட்பட  கல்வி உபகரணங்கள் வரி விகிதம் தற்போது 12% ஆக இருந்து வரும் நிலையில்,  அதனையும்  5% குறைக்க வேண்டும் என இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

க்ரீம் பன்

 தற்போது  4 வரி விகிதமுறையை பின்பற்றப்பட்டு வரும் நிலையில்  3 ஆக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் உடல் நலம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரிவுக்கான ஜிஎஸ்டி விலக்கு மற்றும் குறைப்பு குறித்து  எந்த முடிவும் நேற்றைய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. ரூ.1000க்கு  மேல் இருக்கும் ஆடைகளுக்கான வரி விகிதம் 5% ஆக இருந்து வரும் நிலையில் அதனை  12% அல்லது 18 % ஆக உயர்த்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.  இது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம்  அக்டோபர் 19, 20ம் தேதி டெல்லியில்  நடைபெற உள்ளது  குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web