ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கு புதிய முறை... 2027 ஏப்ரல் 1 முதல் அமல்!

 
ஜிஎஸ்டி

 

ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான புதிய முகமற்ற மற்றும் மையப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறையை 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான புதிய மதிப்பீட்டு முறை... ஏப்ரல் 1-ந்தேதி அமலுக்கு வருகிறது | New assessment system for GST taxpayers... comes into effect on April 1st

மத்திய ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள சுமார் 70 லட்சம் வரி செலுத்துவோருக்காக இந்தப் புதிய கட்டமைப்பை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சி.பி.ஐ.சி.) உருவாக்கி வருகிறது. இதற்கான வரைவு அறிக்கை விரைவில் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் கருத்துகளுக்காக வெளியிடப்பட உள்ளது.

புதிய முறையின்படி, வரி தொடர்பான நோட்டீஸ்கள், விசாரணைகள் மற்றும் உத்தரவுகள் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தளத்தின் மூலம் கையாளப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள பெரிய நிறுவனங்கள், பதிவு, தணிக்கை, மேல்முறையீடு உள்ளிட்ட பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் உருவாக்கப்படும்.

மற்ற வரி செலுத்துவோருக்கு முகமற்ற உதவி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, வர்த்தகர்களின் சிரமங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது