12 அடி நீள மலைப்பாம்பு கோழியை விழுங்கி நகர முடியாமல் தவிப்பு... வைரல் வீடியோ!

 
மலைப்பாம்பு

 

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கோழியை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

 

வி.ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், கோழியை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் மலைப்பாம்பு ஒன்று தவித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

 

13 feet python rescued near Gudiyatham

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில், அந்தப் பாம்பு அருகிலுள்ள அனுப்புக்காட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. விவசாய நிலத்தில் மலைப்பாம்பு தென்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.