Guidance TN நிறுவனத்தில் ஊழியர்கள் ராஜினாமா விவகாரம்: தமிழக அரசு விளக்கம்!

 
தமிழ்நாடு அரசு

 

தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல்கள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம் |Did employees resign all at once? Tamil Nadu provides clarification

இதுதொடர்பாக Guidance தமிழ்நாடு நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கடந்த ஜூலை மாதம் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பெருமளவில் ராஜினாமா செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணியில் இருந்து விலகுவது என்பது நிறுவனங்களில் இயல்பாக நடைபெறும் நிகழ்வு என்றும், Guidance தமிழ்நாடு நிறுவனத்திலும் பணியாளர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகவே பணியில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

சிறந்த வேலைவாய்ப்புகளைத் தேடுவது, உயர்கல்வி, வேறு இடங்களுக்கு இடம்பெயர்வது மற்றும் குடும்பக் கடமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்கள் பணியில் இருந்து விலகியிருக்கலாம் என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பணியாளர்களின் தொழில்முறை விருப்பங்களையும், பிற இடங்களில் வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் அவர்களின் முடிவுகளையும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு ஆரோக்கியமான போட்டியைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருவதாகவும் Guidance தமிழ்நாடு நிறுவனம் தெரிவித்துள்ளது