தமிழகத்தில் நிலங்களின் வழிகாட்டி மதிப்பு 15 சதவீதம் வரை உயர்வு - பதிவுத்துறை புதிய வரைவு அறிக்கை வெளியீடு!

 
பத்திரப்பதிவு

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நில வழிகாட்டி மதிப்பில் நிலவிவரும் முரண்பாடுகளைச் சீரமைக்கும் நோக்கில், நிலங்களின் வழிகாட்டி மதிப்பை 15 சதவீதம் வரை உயர்த்தப் பதிவுத்துறை புதிய வரைவு அறிக்கையைத் தயார் செய்துள்ளது.

நீண்ட காலமாகக் குளறுபடிகளுடன் இருந்த சர்வே எண்கள் மற்றும் தெரு வாரியான நில மதிப்புப் பட்டியலைச் சீரமைக்கும் வகையில், கிராமங்கள் மற்றும் சார்பதிவக எல்லை வாரியாகத் தயாரிக்கப்பட்ட புதிய வரைவு மதிப்புப் பட்டியல் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு

மாவட்ட அளவிலான குழுக்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய மதிப்பீடுகள், வழக்கமான மதிப்பை விட 15 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் எனப் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில மையக்குழுவின் இறுதி ஒப்புதல் பெற்றவுடன் இந்த புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக வீடு, மனை வாங்குபவர்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவுச் செலவுகள் கணிசமாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ரியல் எஸ்டேட் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.