நீளமான தாடி வளர்த்து இளம்பெண் கின்னஸ் சாதனை!!

 
எரின் ஹனிகட்

எல்லா வழியிலும் சாதனை உண்டு என்பதை மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார் அமெரிக்க பெண்மணி. தன்னுடைய குறையை நிறையாக்கி சாதனை படைத்துள்ளார். பெண்கள் அனைவருக்குமே ஹார்மோன் பிரச்சனைகளால் உடலில் பலப்பல தொந்தரவுகள். இதில் சிலர் புலம்பிக்கொண்டே வேலையை தொடர்வர். மேலும் சிலர் இதற்காக மெனக்கெட்டு ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்துக் கொண்டே எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என குறை கூறுவர்.அதையே சாதனையாக்கி கின்னசிலும் இடம் பெற்று விட்டார் அமெரிக்க அசத்தல் பெண்மணி. 

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் வசித்து வரும்  பெண்மணி எரின் ஹனிகட். இவருக்கு வயது 38. இவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்   பிரச்சனை இருந்து வருகிறது.  இதனால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்பட்டு  ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சி இவைகளால் அவதிப்பட்டு வந்தார்.  இதனால் எரின் ஹனிகட்டுக்கு 13 வயதாக இருக்கும் போதே முகத்தில் முடிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.  

ஷேவிங், வாக்சிங் மற்றும் முடியை அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தி தனது முடியை தொடர்ந்து அகற்றிக்கொண்டே இருந்தார். ஆனால்  முடி வளர்வதை கட்டுப்படுத்தவே முடியவில்லை.  இந்நிலையில் ஹார்மோன் பிரச்சனை காரணமாக எரின் தனது டீன் ஏஜ் வயது முழுவதும் இதைத் தொடர்ந்து செய்து வந்தாள்.  அப்பெண் தன் பார்வையை ஓரளவு இழந்த பிறகு, ஷேவிங் செய்வதில் சோர்வடைந்தாள்.  இதே நேரத்தில்  கொரோனா காரணமாக  அவர் தனது தாடியை வளர்க்க முடிவு  செய்தார்.

எரின் ஹனிகட்


இந்நிலையில், தற்போது எரினின் தாடி 30 செமீ  அளவில் உள்ளது.   இப்போது இவர் தான் உலகில் மிக நீளமான தாடியை கொண்ட பெண்மணியாக  கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முந்தைய சாதனை 25.5 செமீ அதாவது 10.04 அங்குலம் நீளமான தாடி 75 வயதான விவியன் வீலருக்கு இருந்தது தான் சாதனையாக இருந்தது. எரின் தற்போது ஏற்கனவே இருந்த சாதனையை   முறியடித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web