கின்னஸ் சாதனை முயற்சி.. 300 நாட்கள்.. 3 முறை.. கீரனூர் மலையேறி கவனம் ஈர்த்த இளைஞர்.. சுவாரஸ்ய பின்னணி!
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (24) என்ற இளைஞர் கின்னஸ் சாதனைக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 3825 அடி உயரத்தில் உள்ள கீரனூர் மலையில் தொடர்ந்து 300 நாட்களாக தினமும் மூன்று முறை ஏறி இறங்கி, சாதனை படைத்துள்ளார் . திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கோபலான், பாக்கியம் தம்பதியின் மகன் கோபாலகிருஷ்ணன் .
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெற்றோருடன் கூலி வேலை செய்து வருகிறார். கீரனூர் மலையில் ஏறி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு. இதை நிறைவேற்றுவதற்காக, அக்டோபர் 2023 இல், கொண்டரங்கி மலையேற்றத்தைத் தொடங்கினார். 3825 உயரமுள்ள இந்த மலையில் அவர் தினமும் மூன்று முறை ஏறி இறங்குகிறார்.

நேற்று 300வது நாள். தினமும் காலை, 6:00 மணிக்கு மலை ஏற துவங்கும் கோபாலகிருஷ்ணன், 90 நிமிடத்தில் மூன்று முறை ஏறி இறங்குகிறார். செங்குத்தான மலையை 20 நிமிடத்தில் ஏறி 10 நிமிடத்தில் கீழே இறங்குகிறார், காலில் செருப்பு இல்லாமல் ஒரு கையில் மொபைல் போனை பிடித்துக்கொண்டு ஏறுகிறார். அவரது கின்னஸ் சாதனை வெற்றி பெற்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்காக விளையாடுவதை தனது இலக்காகக் கொண்டுள்ளார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
