கொரோனா தடுப்பூசி போடுங்க!! ஸ்மார்ட்போன் வெல்லுங்க!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு!

கொரோனா தடுப்பூசி போடுங்க!! ஸ்மார்ட்போன் வெல்லுங்க!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுங்க!! ஸ்மார்ட்போன் வெல்லுங்க!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒட்டு மொத்த இந்தியாவில் 45 கோடி பேர் மட்டுமே முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ளார்கள். 90 கோடி பேர் முதல் டோஸுடன் நிறுத்திவிட்டதாகவும், பலர் இன்னும் முதல் டோஸையே போடவில்லை எனவும் அரசாங்க தகவல் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சமீபத்தில் தேனி மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது மதுரை, கரூர், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என தடைவிதித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடுங்க!! ஸ்மார்ட்போன் வெல்லுங்க!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு!

இந்நிலையில் மாநில மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் குஜராத் மாநிலம் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்பவர்கள் போட்டிக்கு தகுதியானவர்கள் என்றும்,அதில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போடுவதில் சில மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

From around the web