பைக்கில் சிங்கத்தை விரட்டிய வனத்துறை ஊழியர்கள்… அதிர்ச்சி வீடியோவால் வந்த சிக்கல்!

 
சிங்கம்

 

 

குஜராத்தில் சிங்கத்தை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்ற வனத்துறை ஊழியர்கள் 3 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அம்பார்டி சஃபாரி பூங்காவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தீபாவளி விடுமுறையின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில், மூன்று பேர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் சென்று சிங்கத்தைத் துரத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Lion chased by forest staff on bikes at Gujarat safari park, department explains why - India Today

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிங்கத்தை அதன் இருப்பிடமான 'கிரால்' எனப்படும் பாதுகாப்பு வேலியிட்ட பகுதிக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஜெய்பால் சிங் தெரிவித்தார். வழக்கமாக ஜீப் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியில், சிலர் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

சிங்கத்தை துன்புறுத்தும் நோக்கம் ஊழியர்களுக்கு இல்லை என்று உதவி வனப் பாதுகாவலர் மிதேஷ் வானியா விளக்கம் அளித்தார். இருப்பினும், விசாரணையைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்