ஆட்டு மந்தை மீது பாய்ந்த லாரி! 25 ஆடுகள் பலி - வைரலாகும் அதிர்ச்சி CCTV காட்சி
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஆட்டு மந்தை மீது லாரி மோதிய விபத்தில் 25 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 30 ஆடுகள் காயமடைந்துள்ளன.மோர்பி மாவட்டம் மாலியா–கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டு மந்தை ஒன்று சாலையை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி, ஆட்டு மந்தை மீது மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் பல ஆடுகள் தூக்கி வீசப்பட்டன.
🚨 TRUCK CRASH KILLS 25 SHEEP AND GOATS IN GUJARAT A truck hit a herd of sheep and goats on the Kandla–Morbi National Highway near Maliya in Gujarat’s Morbi district. According to reports, 23 sheep and 2 goats died in the accident while more than 30 animals were injured. CCTV footage from October 7 captured the accident. 🎥 CCTV Footage #Gujarat
— contentkikamii (@contentkikamii) October 8, 2026
இந்த விபத்தில் 25 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30 ஆடுகள் பலத்த காயமடைந்தன. விபத்துக்குப் பிறகு லாரி அங்கு நிற்காமல் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதில் ஆட்டு மந்தை சாலையை கடந்து செல்லும் நிலையில், லாரி அவற்றின் மீது மோதிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஆடுகளின் உரிமையாளர் மாலியா மியானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த விதம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆடுகள் உயிரிழந்ததால் அவற்றின் உரிமையாளருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டு மந்தை கடந்து சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
