சாலையில் குறுக்கே வந்த பன்றி… பைக்கில் சென்ற 36 வயது நபர் நிலைதடுமாறி விழுந்து பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
பன்றி

 

குஜராத் மாநிலத்தில் சாலையின் குறுக்கே திடீரென பன்றி வந்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற 36 வயது நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம், ராஜுலா தாலுகாவுக்கு உட்பட்ட மந்தர் கிராமம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. 36 வயதான அந்த நபர் தனது கடைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக பன்றி ஒன்று சாலையின் குறுக்கே ஓடியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பைக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும், காயங்களின் தீவிரம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது எதிர்பாராத தடைகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.