நடுரோட்டில் தீப்பிடித்த கார்… பயங்கர சத்தத்துடன் வெடித்த CNG சிலிண்டர்... பகீர் வீடியோ!
குஜராத் மாநிலம் வதோதராவில், குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து, அதிலிருந்த சிஎன்ஜி (CNG) சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Gujarat #Vadodara - Gas Cylinder Explodes in Car The CNG gas cylinder in the car suddenly exploded People rushed to watch when a fire broke out in the car at night More than 5 people were taken to the hospital for treatment due to burns from the blast The cylinder blast was so powerful that the glass of nearby windows shattered
— Siraj Noorani (@sirajnoorani) November 5, 2026
வதோதராவின் நவயார்டு பகுதியில் உள்ள ராம்வாடி குடியிருப்புப் பகுதியில், நவம்பர் 4-ம் தேதி நள்ளிரவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் காரிலிருந்த சிஎன்ஜி சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிப்பின் தாக்கத்தில் காரின் உலோகப் பாகங்கள் சுமார் 200 மீட்டர் தொலைவு வரை சிதறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதறிய பாகங்கள் தாக்கியதில் பெண் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். காரில் பொருத்தப்பட்டிருந்த சிஎன்ஜி அமைப்பு தொடர்பாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
