திருவள்ளூரில் பரபரப்பு... தவெக எம்.எல்.ஏ. விஜயகுமாரை முற்றுகையிட்ட மக்கள்!

 
tvk

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புக்குளத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை நிகழ்ச்சியில், தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அப்போது, தங்களுக்குப் பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி படம் பார்த்து ராணுவத்தில் சேர்ந்த 150 இளைஞர்கள்...எம்.எல்.ஏ. விஜயகுமார் பேச்சு!

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தவெகவினர் எம்.எல்.ஏ. விஜயகுமாரைப் பின்வாசல் வழியாகப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வெளியே வந்த அவரது காரைப் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானப்படுத்தினர்.