பாதுகாப்புப் படையினர் - மாவோயிஸ்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு.. என்கவுண்டரில் 2 பேர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, மாநில காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசா பகுதியில் மாவோயிஸ்ட்கள் இருப்பது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுன்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களின் உடல்கள் மற்றும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சில மாவோயிஸ்ட்கள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!