காதலுக்கு ஓகே சொல்லல... பள்ளி சென்ற மாணவி துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

 
bihar

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் கைஜியா கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். இவரது 17 வயதான மகள் சோனம் குமாரி, அப்பகுதியில் உள்ள புசா நகரில் இயங்கி வரும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம்போலக் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட சோனம் குமாரி பள்ளிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சோனம் குமாரியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதலில் மாணவி சோனம் குமாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமியாரை சுட்டுக் கொன்ற மருமகன்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிய நபரைக் பிடிப்பதற்காகக் காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சோனம் குமாரியைக் காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தது தெரியவந்தது. மாணவி அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துத் தீர்க்கமாக நிராகரித்ததால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பதி ஆம்புலன்ஸ்

பட்டப்பகலில் பள்ளி மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடூரக் குற்றங்களைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவியின் குடும்பத்தினரின் கதறல் அப்பகுதியில் பெரும் சோக அலையை உருவாக்கியுள்ளது.