ஓடும் காரில் பட்டாசு ஸ்டண்ட்… விரைவுச்சாலையில் வைரலான வீடியோ !

 
கார்

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள துவாரகா விரைவுச்சாலையில், ஓடும் காரில் இருந்தபடி இளைஞர்கள் பட்டாசு வெடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஹூண்டாய் கார் ஒன்று விரைவுச்சாலையில் வேகமாகச் செல்வது தெரிகிறது. காரை ஓட்டிய நபர், ஒரு கையால் ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி மற்றொரு கையால் ஜன்னல் வழியாக 'ஸ்கை ஷாட்' வகை பட்டாசுகளை வானத்தை நோக்கிச் செலுத்துகிறார். இதனால் காரைக் கட்டுப்படுத்துவதில் ஆபத்து ஏற்படுவதுடன், அருகில் செல்லும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தைப் பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்த நபர், சன்ரூஃப் வழியாக நின்றபடி வீடியோ எடுத்துள்ளார். அந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடும் வாகனத்தில் பட்டாசு வெடிப்பது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொறுப்பற்ற செயலாகும்